Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டிற்குள் ஆர்ப்பாட்டதில் இறங்கிய தொல் திருமாவளவன்.!

தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி ஆகியோர் வீட்டில் இருந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியரசும் அவரது வீட்டில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் பதாகைகள் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

Categories

Tech |