Categories
சினிமா

எந்த கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது சல்மான்கான் ..

எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு  கிடையாது என்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சல்மான் கான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

மக்களவைத் தேர்தல் ஆனது  நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின நாடு முழுவதும் தேர்தல் தேர்தல் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றனர் அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டு செல்கிறது  காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கங்கை நதியோரம் தற்போது பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் இது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது

இதனை அடுத்து இந்தியாவின் மத்தியப் பகுதியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரபல நடிகரான சல்மான் கான் அவர்களை காங்கிரஸ் கட்சிக்கு  ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு  வலியுறுத்தியுள்ளனர் இதனையடுத்து இதற்கு சல்மான் கான் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார் மேலும் அவர் வசிக்கும் பகுதியில் கடந்த  பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள்  கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் பயணத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர் இந்த முறை நான் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பல்வேறு தகவல்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்று பரவி வருகின்றன இதனை பொய்யென நிரூபிக்கும் வகையில் சல்மான் கான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது என்றும் எந்த கட்சிக்கும்  ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார் .

Categories

Tech |