கடக ராசி அன்பர்களே …! எதிலும் நியாயமாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவு வர வேண்டும் அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டவர்கள். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். கொஞ்சம் தாமதம் ஏற்படும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும். சகோதர சகோதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று ஒரு வேலையை செய்யும் பொழுதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.