Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்வோம்…! ”மது வாங்கினால் நடவடிக்கை” ஷாக் ஆன குடிமகன்கள் …!!

சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்றதில் நீதிமன்றமும் மதுக்கடைகளை திறப்பதில் எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மதுக் கடைகள் இயங்கக் கூடாது என்று தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றமும் பல நிபந்தனைகளை வழங்கியது. மதுக்கடைகளின் முறையான சமூக விலகல் பின்பற்ற வேண்டும். மூன்று நாட்களில் ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே மது வழங்க வேண்டும் என்று அரசை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசும் டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல உத்தரவுகளை காவல் துறைக்கு  பிறப்பித்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள். வேறு மாவட்டத்தில் சென்று மது வாங்கக்கூடாது. மது வாங்குவோர் வசிப்பிட அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்று காவல்துறை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Categories

Tech |