நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில்,
மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மதுபான கடைகள் கடைகளில் மது விற்பனை நடைபெறும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாவட்டத்திலுள்ள குடிமகன்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட பகுதிகளுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என்று வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள குடிமகன்கள் அடையாள அட்டையை கொண்டு வந்து காண்பித்து வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.