ஏழை மக்கள் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் ஆயிரக்கணக்கான புலம் பெயரந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கி இன்னும் நடந்தே போகும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன
— P. Chidambaram (@PChidambaram_IN) May 6, 2020
அவர் கூறுகையில், புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலத்தை நோக்கி நடந்து போகும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. பஸ், ரயில் ஏற்பாடு செய்துள்ளோம் என மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயின? ஏழை மக்கள் துயரமும் அவர்களின் இன்னலும் மத்திய மாநில அரசின் கண்களில் படவில்லையா? இந்த கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள், நாங்களும் கேட்கிறோம் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த ஏழை மக்களின் துயரமும் அவர்கள் படும் இன்னல்களும் மத்திய, மாநில அரசுகளின் கண்களில் இன்னும் படவில்லையா?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 6, 2020