கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் பயணிக்கும் போது அவர்கள் உண்ண கொடுக்கப்பட்ட உணவு பார்சல்களை ரயில் நிலைய நடை மேடையில் தூக்கி வீசுவதை காணலாம்.
இரயில் நிலையத்தில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://t.co/yvKGPsRAau via @YouTube
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) May 6, 2020
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக உணவை வீசுகிறார்கள்.? “ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் பலரும் கஷ்டப்படும்” இந்த காலகட்டத்தில் இவர்களின் செயல் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
மேலும் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அனைவருக்கும் உணவு கிடைக்கவில்ல என்ற ஆதங்கமா? அல்லது அரசாங்கத்தின் மீதுள்ள குறைபாடா என்பது கேள்வி குறியாக உள்ளது.