Categories
உலக செய்திகள்

எல்லாரும் கடுப்புல இருக்காங்க..! ”நம் மீது போர் தொடுப்பாங்க” அரண்டுள்ள சீனா …!!

சீனா அமெரிக்கா இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

கொரோனா  தொற்று காரணமாக சீனா பெரும் பின்னடைவை அடைந்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.  இது குறித்த அறிக்கையை சீன பாதுகாப்பு அமைச்சகம் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் ஒப்படைத்துள்ளது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகளில் கடுமையான போக்கு 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவத்திற்குப் பின்னர் இருந்ததை காட்டிலும் இப்போது மிகவும் கடுமையாக இருப்பதாகவே கொடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உலகின் இரண்டு அதிமுக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதிகாரிகள் வெளியிடுவதற்கு மறுத்துள்ளனர். இந்த அறிக்கையை தயார் செய்தது பிரபல நிறுவனமான சிஐசிஐஆர் (CICIR) அறிக்கையில் சிறிய பகுதியை வெளியிட்டிருந்தாலும் முக்கிய அம்சங்களை தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுக்க  பட்டதாகவும் கூறப்படுகின்றது. 1980ஆம் காலகட்டத்தில் சீனாவிற்கு ஆலோசனை வழங்கி வந்த சிஐசிஐஆர் தற்போது கொடுக்கப்பட்ட அறிக்கை குறித்து எந்த ஒரு ஆலோசனையும் வழங்கவில்லை.

அறிக்கை குறித்து எழும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதிலிருந்தே அந்த அறிக்கையின் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி அறிக்கையை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு சீனா இரண்டு  முடிவுகளுக்கு வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முக்கியமானது நாட்டின் பாதுகாப்பை மறு ஆய்வு  செய்வதே. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கும் உறவு மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றது.

சீனாவின் தொழில்நுட்ப நடைமுறைகள், நியாயமில்லாத வர்த்தகம் குறித்து நீடித்து வரும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளும் தைவான், ஹாங்காங், தென்சீனக்கடல் தொடர்பான சர்ச்சைகளும் இரண்டு நாடுகளையும் மோதவைக்கும் சூழலையே உருவாக்கியுள்ளது. அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். அதோடு சமீப நாட்களாக சீனாவை குறிவைத்து குற்றம் சாட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனா  வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் சீனா மட்டுமே எனவும் தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் சீனாவின் வளர்ச்சியை காணப் பொறுக்காமல் அமெரிக்கா தேவையில்லாமல் தங்கள் நாட்டை குற்றம்.சாட்டுவதகவே   சீன மக்கள் நம்புகின்றனர். சீனாவின் வளர்ச்சி மேற்குலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருதி வருவதாக சீன மக்கள் நம்புகின்றனர் என பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |