மீன ராசி அன்பர்களே..! இன்று மதிப்பு மரியாதை குறையும். படியான காரியங்களில் தயவுசெய்து ஈடுபடுவதை தவிர்க்கவும். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள் அதாவது வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள். மன அமைதி பெற தியானம் செய்யுங்கள். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். தகராறு வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும்.
நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். மன நோய் ஏற்படலாம். இதில் மட்டும் கவனமாக இருங்கள். அதாவது உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக குறையும். பழைய பாக்கிகளும் வசூலாகும். பணப் பிரச்சனைகள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுங்கள். இன்று பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் எப்பொழுதும் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.