இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீலை அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக அதிபர் டிரம்ப் பணி அமர்த்தியுள்ளார்
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் அதிகளவு இந்தியர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர். அவ்வகையில் நியூயார்க்கில் இருக்கும் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதி ரெட்டி என்பவரை அதிபர் டிரம்ப் பணியமர்த்தி உள்ளார். இதற்கான பணி நியமனத்தை செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.
புகழ் நிறைந்த ஹார்வேர்ட் சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற கோமதி ரெட்டி கொலம்பியாவில் இருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டை எழுத்தராக பணியாற்றியுள்ளார். மேலும் சட்டத்துறையில் பல உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார். இதேபோன்று இந்தியாவை சேர்ந்த வக்கீல் அசோக் மைக்கேல் பிண்டோவை உலக வங்கி குழுமத்தில் இருக்கும் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் அமெரிக்க பிரதிநிதியாக அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் உதவியாளர் உதவியாளராகவும் இணை ஆலோசகராகவும் பணியாற்றிய அசோக்கை ஐ.பி.ஆர்.டி.யின் அமெரிக்க மாற்று நிர்வாக இயக்குனராக இரண்டு வருடங்கள் பதவியில் இருப்பார் என்ன தெரிவிக்கப்பட்டது. அதோடு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் அறிவியல், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பான குழுவின் தலைமை ஆலோசகர், கொள்கை இயக்குனர், அரசாங்க சீர்திருத்த குழுவிற்கான தலைமை ஆலோசகர் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.