கொரோனா தொற்றுக்கான மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் 61500 கோடி ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது
சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி 36 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்து 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலியை எடுத்துள்ளது. இதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்தும், நோயிலிருந்து தீர்வு பெறுவதற்கான மருந்தும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மருந்தை கண்டறியும் முயற்சி உலகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து வருகின்றது. எப்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு எப்போது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதும் இருந்துவருகின்றது.
இந்நிலையில் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் சர்வதேச அளவிலான 40 நாடுகளில் தலைவர்கள் கூட்டம் ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பாக பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தை ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தில் உலக நாடுகள் சுமார் 61 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொரோனா தொற்று மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இந்த முயற்சிக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்டோனியோ கூறியிருப்பதாவது “கொரோனா தொற்று கடந்து செல்வதற்குள் வரலாற்றில் மிகப்பெரிய பொது சுகாதார முயற்சி தேவைப்படுகின்றது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இல்லாதவரை நம்மில் ஒருவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. புதிதாய் கண்டுபிடிக்கப்படும் கருவிகள்கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உலகிற்கு உதவும்.
கண்டுபிடிக்கப்படும் கருவிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். கொரோனா பரவும் வேகத்தை குறைப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றவும் ஒன்றிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் மிகவும் அவசியம் ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்க்கும் நாடுகள் ஆபத்தில் இருக்கின்றன மற்றும் இன்னும் பல நாடுகளை தாக்கும் அபாயம் உள்ளது. அதோடு தொற்றின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் சாத்தியமும் உள்ளது.
உலகில் கொரோனாவால் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாம் அனைவருக்கும் பொதுவான ஒரே பார்வை தேவைப்படுகின்றது. எங்கும் நாம் நமது மக்களை முன்னிலைப்படுத்துவோம்” என கூறினார். தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்க தேவையான நிதி திரட்டும் இந்த கூட்டத்தில் உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.