சென்னையில் பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவுக்கரசி.
இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய நகரில் வசித்து வரும் இவர் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி அன்று தனது மகள் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது இந்நிலையில் பூட்டிய கதவை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
வடிவுக்கரசி அவர்களது வீட்டிலிருந்து திருடர்கள் 100 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர் இந்நிலையில் வடிவுக்கரசி மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது வீட்டுக் கதவைத் திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது பீரோல் ஆகியவை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சோதனையில் ஈடுபட 100 சவரன் நகை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார் இதனையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.