ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பயணம் செய்பவர்கள் வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும் எனவும், கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.