மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே மது கடைகளை திறக்கக் கூடாது, மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டனர். மேலும் மதுக்கடையை திறந்ததை கண்டித்து அவரவர் வீடுகளுக்கு வெளியே 15 நிமிடங்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தவேண்டும். கொரோனவை கட்டுப்படுத்துவதில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது என்றும், மத்திய அரசு தமிழகம் கேட்ட நிதியை வழங்காததை கண்டித்தும் கோஷம் எழுப்ப வேண்டுமென்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அவரவர்கள் இருக்கும் இடத்தில் அங்கங்கே போராட்டம் நடத்தினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் என குடும்பத்தோடு மதுக்கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார் . அதே போல திமுக கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி என திமுக கூட்டணி கட்சி அனைத்தும் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
— M.K.Stalin (@mkstalin) May 7, 2020