Categories
தேசிய செய்திகள்

ஒரு குழந்தை உட்பட 8 பேரை காவு வாங்கிய விஷவாயு…. கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.

இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதிப்புகளால் ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர். ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு வேகமாக பரவி வருகிறது என்றும், பொதுமக்கள் ஈரமான முகக்கவசங்களை அணிந்து தற்காத்துக் கொள்ள காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது, காற்றில் கலந்த விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

Categories

Tech |