திருக்கோயிலில் 33 சதவீத பணியாளர்கள் பணி புரிய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை பணிக்கு வரும் பணியாளர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் 33 % பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். பொதுத் துறை பணியாளர்கள் தேவைக்கேற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினமும் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். பிற பணியாளர்களின் 33 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணியை தொடர வேண்டும்.
குறிப்பாக சளி , இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோயில் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.