33% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் கோவில்களில் பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமில்லாத அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் அலுவலகங்கள் பணிபுரிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது 44வது நாளாக அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கோயிகள், மால் போன்றவை மூடப்பட்டன. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற அனைத்தும் மூடப்பட்டது.
21 நாட்கள் கடந்த நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. மேலும், சில ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் மத்திய அரசி வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும், மே 17ம் தேதிக்கு பிறகு அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கோயிகளில் பணிகளை தொடங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 33% பணியாளர்களுடன் கோயில் அலுவலகங்கள் இயங்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.