கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் வாங்க வந்த கேரளத்தினரை போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.
கொரோனா தொற்று தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக கூட்டணி காட்சிகள் போராட்டமும் நடத்தினர். இன்று காலை 10 மணி முதல் மதுக்கடைகள் தொடங்கி வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகின்றது. மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களின் ஆதார் கார்டு காட்டி மது வாங்கிச் செல்கின்றார்கள்.
இந்த நிலையில்தான் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மதுவங்குவதற்கு சிலர் வருகின்றனர். அவர்களை தடுத்த தமிழக போலீசார் கேரளாவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள். நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வந்த கேரள மாநிலத்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.