அமைச்சர் பதவியை என்னிடம் இன்று கொடுத்தால் நாளை மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்’என்று திமுக வேட்பாளர் T.R பாலு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.க_வின் T.R பாலு அறிவிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சென்னையை அடுத்ததுள்ள குரோம்பேட்டையில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசார தொடக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய வேட்பாளர் T.R பாலு கூறுகையில் , 1 லிட்டர் பெட்ரோலானது தற்போது ரூபாய் 74.75–க்கு விற்பனை செய்யப்படுகின்றது .இந்த விலையானது நியாயமானது கிடையாது . நான், 1996_ஆம் ஆண்டில் பெட்ரோலிய துறை அமைச்சராக இருக்கப்போய் சொல்கிறேன். இன்னு என்னிடம் அதே பொறுப்பை கொடுங்கள் நாளை கலைக்கும் பெட்ரோல் விலையை ரூபாய் 40_ஆக குறைத்து காட்டுகின்றேன் . நான் இங்கு சவால் விடுகிறேன். ரூபாய் 40_க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை கொடுத்து விட்டால் பாஜகவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சவால் விடுத்தார்.