மதுரையில் இன்று பச்சை அட்டைதாரர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அரசு சார்பில் அவ்வப்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதுடன்,
நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் மதுபான கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக சிவப்பு, பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, திங்கள் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் பச்சை அட்டைதாரர்களுக்கும்,
செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட கிழமைகளில் ஆரஞ்சு அட்டைதாரர்களுக்கும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிவப்பு அட்டைதாரர்களுக்கும் மதுபானங்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமையான இன்று மதுரையில் பச்சை நிற அட்டை தாரர்களுக்கு மட்டுமே மது வினியோகம் செய்யப்படும்.