மோடியின் கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மற்றும் உயிரிழப்பு குறைந்த விகிதத்திலையே இருக்கிறது.
மேலும் முன்பை காட்டிலும் கொரோனா பரவல் குறைந்திருப்பதாகவும், 12 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே இரண்டு மடங்கு அதிகரிப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது. தற்போது கொரோனா குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த டிசம்பர் மாதமே சீனாவின் நிலையை வைத்து உலக நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கொரோனாவால் வரும் ஆபத்தை பிரதமர் மோடி முன்பே கணித்து விட்டதாகவும், அவரது கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.