Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்….. ரூ4,46,89,179 அபராதம் வசூல்….. தமிழக காவல்துறை தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கை  மீறியவர்களிடமிருந்து  ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்  முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு  விதிகளை மீறி வெளியே வருவோர்  மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில்,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை  மீறியதாக கூறி  4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை  மீறியதாக இதுவரை 3,59,119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 4,07,890 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து, ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |