Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு விபத்து” கும்பல், கும்பலாக….. 2000 பேர் மயக்கம்….. 8 பேர் மரணம்….!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள LG POLYMER தொழிற்சாலையில் விஷவாயு கசிய தொடங்கியது. அதிகாலை முதலே கசியத் தொடங்கிய இந்த விஷவாயு வெங்கடாபுரத்தை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவியதால், கண் எரிச்சல், வாந்தி, அறிகுறி உள்ளிட்டவற்றை உணர்ந்த கிராம மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தை விட்டு ஓட தொடங்கியுள்ளனர்.

சுமார் 5 கிராமங்களில் இந்த விஷ வாயுவைச் சுவாசித்து, சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே ஈரோடு செல்லும் சாலையோரங்களில் மக்கள் மயங்கி கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது 300க்கும் மேற்பட்டோர்க்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலையில் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இறப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |