Categories
உலக செய்திகள்

ஆப்கானில் 80% பேருக்கு கொரோனா….! வெளியாகிய பகீர் தகவல் …!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றினால் 80% பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 3392 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 50 சதவீதம் பேருக்கு தொற்று  உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 50கோடி  மக்கள் தொகையில் 80% மக்களுக்கு கொரோனா  தொற்று இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

குடிப்பெயர்வுக்காண சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து திரும்பி வந்த இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு ஆப்கானிஸ்தான் போராடி வருகின்றது. ஆப்கானிய சமுதாயத்தின் பொருளாதார நிலை காரணமாக ஈரான் மற்றும் அண்டை நாடுகளுக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தால் தொடர்ந்து வாழ்க்கை வாழ முடியாது.

இதனிடையே அமெரிக்கா மற்றும் தலிபான் தாக்குதல்களும் அதிகரித்துள்ள காரணத்தினால் ஒரு பகுதியில் மோதல்கள் அதிகரித்து நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. அங்கே உள்நாட்டுப் போர் நிலவரத்தின் காரணமாக 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் தொற்றுப் பரிசோதனையை நடத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில்  8 பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு ஒரு நாளில் அதிக பட்சம் 150 பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளும் இல்லை. நாட்டில் தனிமனித ஆயுட்காலம் 50 வருடம் மட்டுமே. அதிகப்படியான மக்கள் எ ச் ஐ வி,  காசநோய், புற்றுநோய், போன்றவற்றுடனே பிறந்துள்ளனர். கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஆபத்தும் உடன் சேர்ந்துள்ளது.

தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் மக்களைத் தனிமைப்படுத்துதல் அங்கு நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமற்றது.  ஒரு குடும்பத்தில் சராசரியாக ஏழு பேர் இருக்கிறார்கள். அதுவும் சிறிய அறையிலேயே வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு மேல் வீடுகளுக்குள் முடங்கியிருக்க அவர்களால் முடிவதில்லை. அவர்களின் சமூக பொருளாதார நிலை வீட்டிலேயே அவர்களை இருக்க விடுவதில்லை.

இதன் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அவர் கூறினார். இந்நிலையில் தலிபான்கள் கொரோனா  தொற்று பாதிப்பை  தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். வெப்பநிலை பரிசோதனை கருவிகளையும் கிருமிநாசினிகள் வீடுகளுக்கு  விநியோகித்து வருகிறார்கள்.  மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |