தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மது நமக்கு தேவைதானா? யாரும் கோரிக்கை விடுகாத நிலையில் அரசு தாமாக முன்வந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியமென்ன ? அரசு தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறந்து கண்டிக்கத்தக்கது என்று விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னதாக அவரின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்தும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.