NLCயில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 தொழிலாளர்கள் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அதில் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பதால் பல நாட்களுக்கு பின்பு நெய்வேலி அனல் மின் நிலையமும் பணியை தொடங்கியது. ஊரடங்கால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் மின் தேவையும், உற்பத்தியும் பல மடங்கு குறைந்திருந்தது.
இந்தநிலையில் இன்று முழு உற்பத்தி திறனை கொண்டுவர NLC ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது அங்குள்ள பாய்லர் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. இதில் 7 தொழிலாளர்கள் சிக்கியுள்ளார். இதன் காரணமாக தற்போது அங்கு மின் உற்பத்தி ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. அதே சமயத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகளும் , தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த விபத்து என்எல்சி அதிகாரிகள் மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.