தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.