தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அளவில் குணமடைந்தவர்களின் விகிதம் 28.60% ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல இறப்பு விகிதம் 0.7% ஆக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனா உறுதியான 580 பேரில் 410 ஆண்கள் மற்றும் 170 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 5,409 பேரில் 3,730 பேர் ஆண்கள் மற்றும் 1,677 பேர் பெண்கள் ஆவர்.