Categories
அரசியல்

ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழிசை ….

தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் ஸ்டாலின் கேள்விளுக்கு தமிழிசை சௌந்தராஜன்  சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்

மக்களவைத் தேர்தல் ஆனது  இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தேர்தல் பணிக்கான பிரச்சார பயணத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சார பயணத்தில் தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன என்று  கேள்வி எழுப்பியுள்ளார் இதற்கு பாஜக மாநிலத் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பதில் அளித்துள்ளார் அவர் கூறியதாவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதற்கான பணிகளில் அயராது உழைத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார் .

மேலும் தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன என்று மு க ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன என்பதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்டியலிட்டு கூற நாங்கள் தயாராக இருக்கிறோம் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் 48 மாதத்தில் அந்த பணிகள் நிறைவடைந்து மருத்துவமனை செயல்பட ஆரம்பித்துவிடும் மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை வசதியை மோடி தலைமையிலான அரசு மேம்படுத்தியுள்ளது மேலும் மதுரை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் நோக்கில் பல்வேறு இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு வந்தது இதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார் இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் என்று அவர் கூறினார்.

மேலும் மக்களவைத் தேர்தலில் எங்களது பிரதமர் வேட்பாளராக நாங்கள் மோடியைத் தேர்வு செய்துள்ளோம் அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் மீண்டும் நாட்டின் பாதுகாவலனாக மோடி வரவேண்டும் என்று கூறியுள்ளார் அதேபோல எதிர்த்தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்களது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று கூறி வருகின்றார் இவரது இந்தப் பேச்சு தமிழக மாநிலத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் இது செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஸ்டாலினை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு ஒரு பிரதமர் பிற மாநிலங்களுக்கு ஒரு பிரதமர் என்று கருதிக் கொண்டு இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

 

Categories

Tech |