மதுக்கடையில் உள்ள நிபந்தனை குறித்து தமிழக அரசு புதிய முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை வகுத்துக் கொடுத்தது. அதில், ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும். சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மது வாங்குவோரின் பெயர், முகவரியை பதிவு செய்து அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரண்டு பாட்டில் வீதம் மதுவை விற்க வேண்டும்.
இதனை மீறி விற்பனை செய்வது நீதிமன்றம் கவனத்திற்கு வந்தால் நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விதித்து. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மதுக்கடை திறந்ததும் 40 நாட்களுக்குப் பின்பு மது வாங்க கூட்டம் அலைமோதியது. சமூக விலகலை கடைபிடித்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர். இதனிடையே தற்போது தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில் ஆதார் கார்டு கட்டாயம் என்பதை நீக்கம் செய்ய வேண்டும். இதனால் அதிகமானோர் ஆதார் கார்டு இல்லாமல் வருகிறார்கள். கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு முறையீட்டு செய்தது. இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.