தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர்.
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் இன்று சென்னை, திருவள்ளுவர், விழுப்புரம், பெரம்பலூர் உட்பட 22 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னைக்கு அடுத்தபடியாக திருவலூரில் இன்று 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் – 45, பெரம்பலூரில் – 33, கடலூரில் – 32, அரியலூரில் – 24, திருவண்ணாமலையில் – 17, செங்கல்பட்டில் – 13, ராணிப்பேட்டையில் – 7, திருச்சியில் – 5, கிருஷ்ணகிரியில் – 4, தேனி மற்றும் நெல்லையில் தலா 3, காஞ்சிபுரம், கரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2, தஞ்சை மற்றும் திருப்பத்தூரில் தலா 2, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மற்றும் வேலூரில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும் கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, சேலம், சிவகங்கை, தென்காசி, திருவாரூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.