மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல கட்டுப்பாடுகளுடன் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டது.40 நாட்களாக மதுவை கண்ணில் பார்க்காத பலரும் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து, சமூக விலகலை கடைபிடித்து மதுவை வாங்கிச் சென்றனர்.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் செட்டிக்குளத்தில் மதுபோதையில் தனது தாயார் ஜெயமணியை வெட்டிக் கொலை செய்த மகன் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பெத்த மகனே அம்மாவை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.