மகாராஷ்டிராவில் சடலங்களுக்கு நடுவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்று உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தற்போது அங்கே சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மகாராஷ்டிராவின் சியோன் மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலை நிலவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அந்த வகையில்,
சடலங்களுக்கு அருகில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்திற்கு மருத்துவமனை அலட்சியம் காட்டுவதாகவும் தொடர்ந்து மற்றொரு புகார் எழுந்துள்ளது.