மிதுன ராசி அன்பர்களே …! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் செய்ய வேண்டிய பணி தாமதம் ஆகலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். தாயின் அன்பு நிறைந்த வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும்.பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சி அடைப்பீர்கள்.
எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு திருப்திகரமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கார்களை ஓட்டிச் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். சொற்களையும் கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியமே. தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக தான் இருக்கும்.
காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்