Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பா போயிட்டாரு…. ஆறுதலுக்கு இருந்த பைக்கும் போச்சு… மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை….!!

சென்னை அருகே இருசக்கர வாகனம் காணாமல் போனதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் கூறிவந்த நிலையில் காவல்துறையினர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் தண்டையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் தனது 12ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்ததும் செல்போன் கடையில் பணிக்கு சேர்ந்து விட்டார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இவரது தந்தை உயர்ரக இருசக்கர வாகனமான R15 வண்டியை வாங்கி தந்துள்ளார்.

வாங்கித்தந்த ஆறுமாத காலத்திலேயே உடல்நிலை சரியில்லாமல் போக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தந்தையின் நினைவாக மகன்  இருசக்கர வாகனத்தை பேணி பாதுகாத்து வந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி இரு சக்கர வாகனம் மர்மநபர்களால் திருடுபோனது. இது குறித்து அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற காவல்துறையினர் திருடர்களை பிடிக்க காலதாமதம் ஆக்கியதால் மன உளைச்சல் அடைந்த அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விளக்கமளிக்கையில், அவர் போதைக்கு அடிமையான தாகவும், போதைப் பொருள் வாங்க வீட்டில் பணம் தராததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும், ஏற்கனவே இது போன்ற நிகழ்வு நடந்த போது காவல்துறையினர் சார்பில் அவரிடம் கடிதம் எழுதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். எனவே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு இருசக்கர வாகனம் காணாமல் போனது காரணமல்ல என காவல்துறையினர் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |