கடக ராசி அன்பர்களே …! இன்று உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் இனிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். நம்பிக்கையை காப்பாற்றிவிடுவீர்கள். பெண்களுக்கு இன்று சந்தோஷமும் மனநிறைவும் ஏற்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கொட்டும். புதிய லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
காதலர்களுக்கு இனிமையான நாளாகவும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.