Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…நிம்மதி குறையும்…செலவு அதிகரிகலாம்…!

சிம்ம ராசி அன்பர்களே …!    இன்று மனதில் சஞ்சலம் உருவாகலாம். அனுபவங்களையும் பாடமாக கொண்டு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சீர்திருத்தம் அவசியம். பணவரவை சிக்கனமாக செலவு செய்யுங்கள். வாகனத்தில் மித வேகத்தில் பின்பற்றுங்கள். பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் வரலாம். அதனால் மன நிம்மதி இழந்து காணப்படும்.

செய்யும் பணிகளில் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும்.  பேச்சைக் குறைப்பது ரொம்ப நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் வேண்டும். காதலில் இன்று பொறுமை காக்க வேண்டும்.

நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே காதலில் வெற்றி பெற முடியும். தேவையில்லாத விஷயத்தில் பேசி வாக்குவதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |