கன்னி ராசி அன்பர்களே …! இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். விருது விழாவில் கலந்துக் கொள்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் அனுசரித்துச் செல்வது நல்லது.
பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்வீர்கள். இன்று வெளியூர் பயணம் ஏற்படலாம் பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
மிக முக்கியமாக வெளி நபரிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். இன்று சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும்,சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.