மீன ராசி அன்பர்களே…! இன்று உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொடர்பில்லாத பணி உருவாகும்போது உங்க குடும்ப உறுப்பினர்களும் சரி செய்யும் உதவிகளை செய்வார்கள். தொழிலில் கூடுதல் உழைப்பால் மட்டுமே திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் மட்டும் தகுந்த அக்கறை வேண்டும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். வீண் கவலைகளை விட்டு விடுங்கள்.
எடுத்த செயலை செய்து முடிக்க முடியாமல் தடை கொஞ்சம் இருக்கும். பணவரவு கூடும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர்கள் பிடிப்பதற்கு அதிகமாக அலைய வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுங்கள். காதலர்களும் இன்று மனம் விட்டு பேசுங்கள் வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து யாரும் ஈடுபடவேண்டாம்.
பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். பிள்ளைகள் மீது அக்கறை கொள்வீர்கள். இன்று நீங்கள் சிந்தனை மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.