பெண்கள் 3 பேருக்கு மொட்டை அடித்து அரை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் டாக்ரம்மா என்ற கிராமத்தில் அங்கு வந்த பெண்கள் 3 பேரை மந்திரவாதிகள் என்று நினைத்து கிராமத்திலிருக்கும் கும்பல் ஒன்று அவர்களுக்கு மொட்டையடித்து அப்பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்களை அரை நிர்வாணமாக்கியதோடு சிறுநீரைக் குடிக்க செய்து இரண்டு சக்கர வாகனம் மூலம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு செய்வது மிகப்பெரிய குற்றம் என குறிப்பிட்ட மாவட்ட காவல்துறையினர் விசாரணையில் 9 பேரை கைது செய்து இருப்பதாகவும் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.