Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் பயப்படுவேன்…. பதற்றமாக இருப்பேன்… கேப்டன் கூல் தோனி…!

எனக்கு கிரிக்கெட்டில் பயம், பதற்றமும் இருக்கும் என கேப்டன் கூல் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் முன்னாள் வீரர் பத்ரிநாத்MFORE என்ற நிறுவனத்தைநடத்தி வருகின்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மன உறுதியோடு, மன அழுத்தமின்றி விளையாட வழிவகை செய்தது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து மகேந்திர சிங் தோனி தெரிவித்ததில், நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இதனை நாம் மன நோய் என்று சொல்லுவோம்.

நான் கிரிக்கெட்டில் களமிறங்கும் போது ஐந்து முதல் பத்து பந்துகளை எதிர்கொள்ள பயப்படுவேன். பதற்றம் அதிகமாக இருக்கும், கொஞ்சம் பயம் இருக்கும், சிலருக்கு இது அதிகமாகவே இருக்கும். இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல அதிகளவு தயக்கம் இருக்கும். இதனை பயிற்சியாளரிடம் சொல்ல வேண்டும் என்றால் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

நம்முடைய மன அழுத்தத்தை சமன் செய்யக் கூடிய பயிற்சியாளர் 15நாள் நம்மோடு இருக்கும் பட்சத்தில் நாம் அந்த பிரச்சனையை அவரிடம் கூற முடியும். பிரச்சினையை சரி செய்ய முடியும். அவர்கள் நம்மோடு எப்போதும் பயணிக்க வேண்டும். என்னைப் பொறுத்து வாழ்க்கையில் மன தெளிவுடன் இருப்பது மிகவும் முக்கியமானது என்று எம்எஸ் தோனி தெரிவித்தார்.

Categories

Tech |