Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு. ஏற்பட்டுள்ளது.

ஒரே தெருவை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தெரு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேலும் சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் இதுவரை 10 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 4 கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை நடைபெறுகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் இதுவரை பாதிப்பு 60ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |