செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டில் 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கொரோனா பதித்த 8 பேரும் கோயம்படு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்கள் என தெரிவியவந்துள்ளது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் 89 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 97 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை 11 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 45வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல,தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.