Categories
தேசிய செய்திகள்

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி…!

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 6 பேரும், திரிபுராவில் 24 பேரும் எல்லை பதிக்காப்பு பணியில் ஈடுபட்டருந்தனர்.

தற்போது திரிபுராவில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 86 வது பட்டாலியனுக்கு அருகில் அமைந்துள்ள பி.எஸ்.எஃப் இன் 138 வது பட்டாலியன் தலைமையகத்தில் உள்ள 62 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுருந்தது. தற்போது மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

அதேபோல டெல்லியில் பணிபுரிந்து வரும் 6 பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 41 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியானது.

நேற்று வரை டெல்லியில் மட்டும் 195 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதில், இரண்டு பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |