பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக ரயில்வே சார்பில் 222 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” சிறப்பு ரயில் வசதியை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
“மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் ஏறியதால் மரணமடைந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமான என்று இணை செயலாளர் கூறினார். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வணிக விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பவும், அதேபோல வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக சுகாதாரம், வெளிவிவகாரங்கள் மற்றும் உள்துறை விவகாரங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் ஆயுதப்படைகள் மற்றும் ஏர் இந்தியா ஆகிய துறைகள் சார்ந்த அதிகாரிகள் கொண்டு (SOS)குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே இன்று அழைத்துவரப்படுவர் என்றும், இந்தியா வந்ததும் அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவித்தார்.