Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா – கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்த எர்ணாகுளம் நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போது 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 19,810 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர் என்றும், 347 பேர் மற்ற  மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |