தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம்.
இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பித்திருக்கின்றது. முன்பாக நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்த போது டாஸ்மார்க் மதுக்கடைகளை கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.