தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில்சுமார் 2 கிலோ மீட்டர் வரை நின்று பலமணிநேரம் காத்திருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம்.
இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்பாக நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்த போது டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து . தற்போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய அரசு முயற்சி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பொதுமுடக்கம் முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஒரு மாநிலம் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றதை சுட்டிக்காட்டி தமிழக அரசும் மேல்முறையீடு செய்து அனுமதி பெற இருப்பதாக தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தார்கள்.