கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார்.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால் உங்களுக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல், சர்க்கரை வியாதி போன்ற எந்த பிற வியாதியும் கிடையாது, 40 வயது குறைந்தவர்களாக இருக்கீறீர்கள் என்றால் உங்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, ஸ்கிரீன்னிங் செய்து மருத்துவர்களின் ஆலோசனை பேரில் வீட்டில் வைத்து கண்காணிக்க படுவார்கள் என்று மத்திய அரசு கொடுத்த வழிகாட்டலை நாம் நாம் அமல்படுத்தி வருகிறோம்.
அதில் கூட சில நிபந்தனைகள் இருக்கிறது. உங்கள் வீடுகளில் அட்டாச் பாத்ரூம், உங்களுக்கென்று தனி படுக்கையறை இருக்கிறதா, நீங்க சமூக விலகலை கடைப்பிடிக்க வசதிகள் இருக்கிறதா ? என்பதை அரசு ஆய்வு செய்து உறுதி படுத்தி நிபந்தனையோடு மருத்துவர்களின் உரிய ஆலோசனை வழங்கி தான் வீட்டில் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசு வழிகாட்டு இப்படி இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் கூடுதலாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனைவருக்கும் ஒரு கிட்டை வழங்க வலியுறுத்தி உள்ளார்கள்.
அதில் அவர்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்?
என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது ?
உடன் இருப்பவர்கள் எப்படி பராமரிக்க வேண்டும் என்ற வழிகாட்டல் இருக்கும்.
அதே போல கொரோனா பாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர சிகிச்சை என்ன ?
என்ன மாதிரியான உணவு வகைகள் ?
இந்திய மருத்துவத்துறையின் உணவு வழிமுறைகள் என்ன ?
அவர்களுக்கு தேவைப்படுகின்றன மூன்றடுக்கு முகக் கவசங்கள் ?
மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜிங்க் மாத்திரைகள். மல்டி விட்டமின் மாத்திரைகள் 50 வழங்கப்படுகிறது
மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த ஆரோக்கியம் என்ற திட்டத்தின் கீழ் கபசுரக் குடிநீர் பொட்டலங்களும், நிலவேம்பு குடிநீர் பொட்டலங்களும் வழங்கப்படும்.
அதேபோல ஒரு சோப்பு , ஹாண்ட் சானிடைசர், ஒரு கையேடு அடங்கியவை அடங்கிய தொகுப்பு கொடுக்கப்படும்.
இதனால் கொரோனா அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தர்.