Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் ஆனாலும் விடாதீங்க….! ”எல்லா உங்க கைக்கு வந்துரும்” இது ரொம்ப முக்கியம் …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கின்றது. வழக்கறிஞர்களை தயார் நிலையில் இருக்க சொல்லி தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. இரண்டு வகைகளில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றது.

இன்று இரவே ஆன்லைன் மூலமாக இந்த மனுவை தாக்கல் செய்து விட்டு நாளை காலை உடனடியாக வழக்கில் அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதற்காக நடவடிக்கையில் தீவிரமாக இருக்கிறார்கள். இல்லை என்றால் நாளை காலை உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து பிறகு உடனடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனத்துக்கு இந்த வழக்கை எடுத்துச் செல்வதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

 

தமிழக அரசின் வழக்கறிஞர்கள் இது சம்பந்தமான விஷயங்களை தயார் செய்வதற்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகல் கைகளில் கிடைத்தவுடன்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மதுக்கடை திறப்பது எனபது தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையை முடியாது என்பதுதான் வழியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

Categories

Tech |